ரொம்ப நாளாக நான் உங்களுடன் பேசவேயில்லை. வெறுத்துப் போயிருப்பீர்கள். காரணம் இத்தொழில் நுட்பத்தில் நான் முதல் வகுப்பு மாணவனே. ஆனா, ஆவன்னா டோண்டு ராகவன் சொல்லித் தெரிந்தது. பிறகு கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். இன்றுதான் அவர் தரிசனம் கிடைத்தது. இன்று ஈனா பாடம் நடக்கிறது. மன்னிக்கவும். உங்கள் எல்லோரின் வரவேற்புக்கு உடன் பதில் தர இயலவில்லை. இனி தொடர்ந்து சம்பாஷிக்கலாம் என்று நம்புகிறேன்.
உங்கள் எல்லோருடைய தொடர்பும் சந்தோஷமளிக்கிறது. இனி உங்களை தாமதிக்க வைத்து ஏமாற்ற மாட்டேன் என்று நம்புகிறேன். திரும்பவும் என் தொடர்பு, சொல்லிக் கொடுத்த ஈயன்னாவோடு முடிகிறதா இல்லை அதற்கு மேல் செல்கிறதே என்பதைப் பொறுத்திருக்கிறது.
அன்புடன்,
வெசா
இட்லிவடை : வருத்தமான யதார்த்தம் - நேசமுடன் வெங்கடேஷ்
-
நண்பர் வெங்கடேஷ் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவரை பற்றிய விரிவான
அறிமுகம் இங்கே இருக்கிறது. தொடர்ந்து பல பத்திரிகையில் எழுதி வருபவர். இவருடைய
'டிஜிட...
1 day ago

3 comments:
i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here
வாங்க சார் வாங்க....
பெரிய தலைகள் எல்லாரும் வலைப்பிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்... எங்க பாடு இனி திண்டாட்டம் தானோ
"இனி உங்களை தாமதிக்க வைத்து ஏமாற்ற மாட்டேன்" - என்று செப்ட் 7-ல் சொல்லிச் சென்று, இன்னும் ஏதும் புதிதாக இல்லை என்று தெரிகிறதே!
எனது இந்தப் பதிவுக்கு மன்னிக்கணும்; ஆனாலும் தப்பென்னவோ உங்களுடையதுதான். இருப்பினும் எனது 'முடியை' உங்களுக்குத் தர எனக்கு மறுப்பேதும் இல்லை.
அன்புடன்....
Post a Comment