Friday, August 12, 2005

நான் வெங்கட் சாமினாதன்

நான் வெங்கட் சாமினாதன். வெசா என்று அழைப்பார்கள் என்னை. விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.

கடந்த 40 வருடங்களாக தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கிய நடப்புகளைப் பற்றி மனதுக்குப் பட்டதை கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நினைப்பின்றி எழுதி வந்திருக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷது.

ஆனால் ஈஸ்வரனும் ரக்ஷித்ததாகத் தெரியவில்லை. நான் நானாகத்தானே இருக்க முடியும்!

அன்புடன்,
வெசா

21 comments:

era.murukan said...

Welcome, Mr.Venkat Swaminathan.

icarus prakash said...

வருக... வருக...

கொழுவி said...

வலைப்பதிவராகச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

ராஜா said...

வலைப்பதிவு உலகிற்கு நல்வரவு.

முகமூடி said...

வாங்க வாங்க... * வெசாவுக்கு முன்னாடி இருந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வேன் நான்...

* (வலைப்பதிவில்) என்பது விடுபட்டுவிட்டது ;-))

-/பெயரிலி. said...

வருக

Srikanth said...

நல்வரவாகுக. நன்றி.

newsintamil said...

வலையுலகிலும் உங்கள் காரமான விமர்சனங்கள்?
வருக...!

Mookku Sundar said...

வருக வருக.

//கடந்த 40 வருடங்களாக தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கிய நடப்புகளைப் பற்றி மனதுக்குப் பட்டதை கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நினைப்பின்றி எழுதி வந்திருக்கிறேன்.//

நாம விமரிசிக்கிற வரைக்கும் நல்லாத்தான் இருக்கு. நம்மை விமரிசிக்க ஆரம்பித்தால் தான் விமரிசிக்கப்படுவதில் உள்ள கஷ்டம் புரிகிறது. :-)

அது சரி ஸார், "இளைய தலைமுறை இப்படி தமிழைக் கட்டிக்கிட்டு புரளுது. வாழ்க்கைக்கு உதவாத வேலை" ன்னு சொன்னீங்களாமே ( கனடாவில்..??) உண்மையா..??

அண்ணாகண்ணன் said...

எல்லையற்ற, கட்டுப்பாடுகள் அற்ற, சுதந்திரமான வெளிக்குள் உங்கள் குடிலை அமைத்துள்ளீர்கள். வேறு எந்த ஊடகத்தையும் விட இது சிறந்தது என்பதை விரைவில் புரிந்துகொள்வீர்கள்.

வாழ்த்துகளுடன்,
அண்ணாகண்ணன்.

Vaa.Manikandan said...

Welcome!

lazy geek said...

Welcome to the blogging world !!

I've known you as an ace critic. To know you as a blogger introduces a different dimension.

வெ.சா said...

"இளைய தலைமுறை இப்படி தமிழைக் கட்டிக்கிட்டு புரளுது. வாழ்க்கைக்கு உதவாத வேலை" ன்னு சொன்னீங்களாமே ( கனடாவில்..??) உண்மையா..??

இதை யார் உங்களுக்கு சொன்னது? இதை உங்களுக்குச் சொன்னவர் என்னிடம் விரோத பாவம் கொண்டவராக இருப்பதால்தான் இப்படிக் கற்பித்துக் கொண்டு வதந்தி பரப்புகிறார். இனி அவரை நம்புவதோ என்னை நம்புவதோ உங்களுக்கு என்னிடம் இருக்கும் நட்பையோ விரோதத்தையோ பொறுத்தது.

அன்புடன்,
வெசா

Mookku Sundar said...

அன்புக்குரிய வெசா சார்,

நான் தான் தமிழ் இணையத்தில் படித்தேன். ஆனால் எங்கு படித்தேன் என்று நினைவில் இல்லாமல் இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. உங்கள் கனடா பயணத்தின் போது ஏதோ ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் நீங்கள் இதை சொன்னதாக வந்திருந்தது. உடனே அதைப் பற்றி அப்போது எழுதினேன்.

http://valaippoo.yarl.net/archives/001599.html

ஒரு தமிழ் ஆர்வலன் என்ற முறையில் எது உங்களை அப்படி சொல்லத் துண்டியது..? என்ன காரணம் என்பதை அறிய விரும்பினேன்.

-சுந்தரராஜன்

Santhosh Guru said...

வருக...வருக

வெ.சா said...

அனைவருக்கும் நன்றி !!!

நந்தன் | Nandhan said...

Welcome Vesa.

கால்கரி சிவா said...

வருக வருக தங்களின் அருமையான பதிவுகளை பதிக

Santhosh Guru said...

Sodhanai Pinnoottaam

வெ.சா said...

என்னவோ எனக்குள் சொல்லிக் கொடுத்தது புரிந்து விட்டதாகத் தான் நினைப்பு. ஆனால் குரு இடத்தை விட்டு நகன்ற பிறகு அப்படி ஒன்றும் இல்லை என்பது தெரிகிறது. கற்றுக்கொள்வது இந்த வயதில், காலத்தில் பின் தங்கி விட்டோம் என்று தோன்றுகிறது. முதலில் டோண்டுவும், விஸ்வாமித்திரரும், பின்னர் சந்தோஷ் குரு, பின்னர் மறுபடியும் சந்தோஷ் குரு, பக்கத்தில் இருக்கும் டோண்டு தரிசனம் கொடுத்தால், அதுவும் கொஞ்சம் பயனளிக்கும். ஆனால், ஐன்ஸ்டைனை எப்படி எனக்கு கூட்டல் கழித்தல் சொல்லிக்கொடுக்க அழைப்பது? சந்தோஷ் குரு பொறுமை சாலி. ஆனால் அவர் இருப்பது எங்கோ, வேலைப் பளு எவ்வளவோ. இடையில் பழக்கப்பட்டவனுக்குத்தானே மாடு கறக்கும். இந்த டப்பாவும் குருக்களுக்குத் தான் சொன்னபடி கேட்கிறது. என்னிடம் முரண்டு பிடிக்கிறது. நண்பர்கள் மன்னிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தேறி விடுவேன் என்று நினைக்கிறேன். நன்றி- வெ.சா.

வெ.சா said...

வெகு நாட்களுக்கு, இல்லை, மாதங்களுக்குப் பிறகு தொடர்கிறேன். இனி நம் சம்பாஷணைகள் உடனுக்குடன் தொடரும் என்று நம்புகிறேன். .வெ.சா.