Wednesday, September 07, 2005

நலமா?

ரொம்ப நாளாக நான் உங்களுடன் பேசவேயில்லை. வெறுத்துப் போயிருப்பீர்கள். காரணம் இத்தொழில் நுட்பத்தில் நான் முதல் வகுப்பு மாணவனே. ஆனா, ஆவன்னா டோண்டு ராகவன் சொல்லித் தெரிந்தது. பிறகு கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். இன்றுதான் அவர் தரிசனம் கிடைத்தது. இன்று ஈனா பாடம் நடக்கிறது. மன்னிக்கவும். உங்கள் எல்லோரின் வரவேற்புக்கு உடன் பதில் தர இயலவில்லை. இனி தொடர்ந்து சம்பாஷிக்கலாம் என்று நம்புகிறேன்.

உங்கள் எல்லோருடைய தொடர்பும் சந்தோஷமளிக்கிறது. இனி உங்களை தாமதிக்க வைத்து ஏமாற்ற மாட்டேன் என்று நம்புகிறேன். திரும்பவும் என் தொடர்பு, சொல்லிக் கொடுத்த ஈயன்னாவோடு முடிகிறதா இல்லை அதற்கு மேல் செல்கிறதே என்பதைப் பொறுத்திருக்கிறது.

அன்புடன்,
வெசா

Friday, August 12, 2005

நான் வெங்கட் சாமினாதன்

நான் வெங்கட் சாமினாதன். வெசா என்று அழைப்பார்கள் என்னை. விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.

கடந்த 40 வருடங்களாக தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கிய நடப்புகளைப் பற்றி மனதுக்குப் பட்டதை கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நினைப்பின்றி எழுதி வந்திருக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷது.

ஆனால் ஈஸ்வரனும் ரக்ஷித்ததாகத் தெரியவில்லை. நான் நானாகத்தானே இருக்க முடியும்!

அன்புடன்,
வெசா